Vidinthatha Pozhuthum

Song lyrics

Vidinthatha Pozhuthum

விடிந்ததா பொழுதும்

1862 views

Singer · Ilaiyaraaja

Lyrics · Vaali

The lyrics

விடிந்ததா பொழுதும் விடிந்ததா
ஓ முடிந்ததா இரவும் முடிந்ததா
அதிகாலைப் பொழுதிலே நெடுவானம் வெளுத்ததே
அது போல மனிதனே மன வானம் வெளுக்குமா
இது ஏன் ஏன் புரியுமா………(விடிந்ததா)

சோலை மலரை எடுத்து அதை
பாலை நிலத்தில் எறிந்து பழி தீர்த்தானே ஏன்
சிற்பம் ஒன்றை வடித்து அது
சிதறும் போது துடித்து நிலை சாய்ந்தானே ஏன்

இது ஒருவன் பாவமா
பல உயிரின் சாபமா
விடை யார் சொல்வார்
அழுதால் தொழுதால் வருமோ……( விடிந்ததா)

காத்து இருக்கும் தந்தை ஒரு
காலனாகும் விந்தை இது ஏன் தேவா சொல்
கைகள் தனது கைகள் குத்தும் கண்கள்
தனது கண்கள் இது ஏன் தேவா சொல்

அன்று எதிரும் புதிருமாய்
இன்று உறவும் பிரிவுமாய்
உயிர் துடிக்க வைப்பதேன்
அழுதால் தொழுதால் வருமோ…….(விடிந்ததா)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pillai Paasam

Keep listening

More from this movie

  1. Nalla Thalaivanum Thalaiviyum நல்ல தலைவனும் தலைவியும்

    Sung by Mano, Minmini

  2. Pattapagalo Kottum Mazhaiyo பட்டப் பகலோ கொட்டும் பனியோ

    Sung by S. P. Balasubramaniam

  3. Vidinthatha Pozhuthum விடிந்ததா பொழுதும்

    Sung by Ilaiyaraaja

  4. Raja Rathirikku Paattu ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா

    Sung by S. Janaki