Song lyrics
Poopola Theepola
பூப்போல தீப்போல
47802 views
Singer · Hariharan
Lyrics · Pa. Vijay
The lyrics
பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளர்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்
மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும் எப்படியோ
மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ
அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன்
இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்
அடி பிரியசகி சொல்லி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை
சோழியை போலவே தோழி நீ சிரித்து சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய்
ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oru Thadavai Sollvaya ஒரு தடவை
Sung by Chinmayi, Hariharan
-
Venaam Venaam வேணா வேணா
Sung by Sadhana Sargam, Udit Narayan
-
Nenjam Oru Murai நெஞ்சம் ஒரு முறை
Sung by Srinivas
-
Poopola Theepola பூப்போல தீப்போல
Sung by Hariharan
-
Aaha Enparkal ஆஹா என்பார்கள்
Sung by Shankar Mahadevan
-
Marriage Endral மேரேஜ் என்றால்
Sung by Karthik