Kaatrukku Thudivittu artwork

Song lyrics

Kaatrukku Thudivittu

காற்றுக்கு தூதுவிட்டு

16948 views

Singer · K. S. Chithra, P. Unnikrishnan

The lyrics

காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

துள்ளி துளி ஓடலாம் மான்களாக ஆகலாம் பூவனங்கள் போகலாமா
முள்ளில்லாத பூக்களில் சுற்றுலாக்கள் போகவே வண்டு போல மாறலாமா
கோடை காலம் தீர்ந்தாச்சு சொகம் ஓடி போயாச்சு சொந்தங்கள் புதுசாச்சு
காட்டு மூங்கில் குழலாச்சு காற்றும் கூட சேர்ந்தாச்சு கற்பனை நிஜமாச்சு
ஒளிந்திருந்த புன்னகை இன்று ஒவ்வொரு நிமிஷமும் வெளியாச்சு
முகம் மறைத்த மேகங்கள் விலகி முழுமதி வெளியே வந்தாச்சு
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

வெண்புறாக்கள் கூட்டமே எங்களோடு கூட்டணி சேர்ந்துக்கொள்ள வேண்டுகின்றதே
வெட்டுகின்ற மின்னலோ சற்று நேரம் நின்றதே கையெழுத்து வாங்கி சென்றதே
பூமியெங்கும் வலைவீசு நம்மை போலே ஆளேது நினைத்தால் இனிக்கிறது
சொந்தமாக ஒரு வீடு நிலவில் வாங்கு என்னோடு சிறகுகள் முளைக்கவிடு
இமை இருக்கிற துணையில் தானே விழிகள் இங்கே இருக்கிறது
நிலமிருக்கிற துணையில் தானே வேர்கள் இங்கே வளர்கிறது
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Unnidathil Ennai Koduthen

Keep listening

More from this movie

  1. Eatho Oru Paatu En ஏதோ ஒரு பாட்டு

    Sung by Hariharan

  2. Malligai Poovea மல்லிகைப் பூவே

    Sung by Hariharan, Sujatha Mohan

  3. Kaatrukku Thudivittu காற்றுக்கு தூதுவிட்டு

    Sung by K. S. Chithra, P. Unnikrishnan

  4. Vaanam paadiyen வானம்பாடியின்

    Sung by Sujatha

  5. Thottabedda Kuliru தொட்டபெட்டா

    Sung by Hariharan

  6. Etho Oru Paatu ஏதோ ஒரு பாட்டு

    Sung by Sujatha