Kutrala Kaatru

Song lyrics

Kutrala Kaatru

குற்றாலக் காற்று

177 views

Singer · S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyrics · Piraisoodan

The lyrics

குற்றாலக் காற்று வற்றாத ஊற்று
பாலாறு மேனி தொடும் ஆரம்
குற்றாலக் காற்று வற்றாத ஊற்று
பாலாறு மேனி தொடும் ஆரம்
தோளிலே ஓடும் பூந்தென்றலே
மார்பிலே ஆடும் தேன் மன்றலே
அள்ளி நான் ஆடவா ஆசை தீர்க்கவா
அள்ளி நான் ஆடவா ஆசை தீர்க்கவா
அன்பே...

கண்கள் ஒரு வேடம் போடுதே
கைகள் ஒரு கோலம் போடுதே
வெட்கம் ஒரு வேலி போடுதே
வெள்ளம் அதில் பாயத் துடிக்குதே
காதல் எப்போது கனிந்தது
கைக்குள் எப்போது பணிந்தது
கனியே உன்னாலே இதயம் மெல்லப் பறிபோனது
தொடவே கூடாத இடமும் மெல்லத் தொட்டாடவா
துடித்தே பாடாத மனமும் இன்று தள்ளாடவா
அணைத்தாயே என்னை உன்னோடு...

குற்றாலக் காற்று வற்றாத ஊற்று
பாலாறு மேனி தொடும் ஆரம்

அங்கம் ஒரு ராகம் பாடுதே
அந்தி நிலா நாணம் கொள்ளுதே
தங்கம் உன்னைத் தழுவிக் கொள்ளவே
தாமரைப்பூ தத்திக் கொள்ளுதே
மஞ்சள் குங்குமம் வாழுது
மாலை மார்பிலே ஆடுது
இளமை போனாலும் இனிமை என்றும் உன்னோடுதான்
இடையில் வந்தாலும் இணைவு இன்னும் என்னோடுதான்
திறந்தாயே இன்பப் பன்னீரை...

குற்றாலக் காற்று வற்றாத ஊற்று
பாலாறு மேனி தொடும் ஆரம்
தோளிலே ஓடும் பூந்தென்றலே
மார்பிலே ஆடும் தேன் மன்றலே
அள்ளி நான் ஆடவா ஆசை தீர்க்கவா
அள்ளி நான் ஆடவா ஆசை தீர்க்கவா
அன்பே...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaaval Geetham

Keep listening

More from this movie

  1. Sokkanukku Vaacha சொக்கனுக்கு வாய்த்த

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki

  2. Enathu Thitta எனது திட்டம்

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki

  3. Thammara Thammaro தம்பர தம்மரோ

    Sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra

  4. Then Pothikai தேன் பொதிகை

    Sung by K. S. Chithra

  5. Ethanai Pera எத்தனை பேரா

    Sung by S. N. Surendar, K. S. Chithra

  6. Kutrala Kaatru குற்றாலக் காற்று

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki