Muthumani artwork

Song lyrics

Muthumani

முத்துமணி

0 views

Singer · Ilaiyaraaja, Shweta Mohan

Lyrics · Ilaiyaraaja

The lyrics

முத்துமணிச் சரம் கோக்கணும் கோக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
முத்துமணிச் சரம் கோக்கணும் கோக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
மஞ்சளும் குங்குமம் சந்தனம் குழைச்சிட
பூசணும் பூசணும் பொன்மணிக்கு
பொன்மணிக்கு... பொன்மணிக்கு... பொன்மணிக்கு...

மண்ணிலுள்ள தாய்களுக்கெல்லாம்
ஒரு மகளாகப் பிறந்தவளே
நம் குலம்தான் உலக உயிரைக் காக்குமடி
தவிப்பவரின் துயரை எல்லாம் போக்குமடி
அந்த வானத்தில் மின்னிடும் தாரகை போலே
இங்கு வந்தவளே

முத்துமணிச் சரம் கோக்கணும் கோக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
மஞ்சளும் குங்குமம் சந்தனம் குழைச்சிட
பூசணும் பூசணும் பொன்மணிக்கு

வனக்கிளியே உன்னை காணாத நாள் இங்கு
நாள் இல்லையே... நாள் இல்லையே...
நாள் இல்லையே... நாள் இல்லையே...

பொன்மயிலே நீ இல்லாமல் பொழுதிங்கு
நகரலையே... நகரலையே... நகரலையே...

அக்கம் பக்கம் போனபோது உன்னப் பார்த்தவன் நான்
பக்கம் பக்கம் இருந்தபோது உன்னப்பாக்கலையே
அருகே இருந்தபோது நானும் வெகு தூரத்திலே
தேடுகிற போது என் நெஞ்சு பாரத்திலே

முத்துமணி பவளமணி மாலைகளைச் சூடி
மின்னும் பொன்னும் வைரக் கிரீடம்
சிரசில் தக தகவென ஜொலிக்கும்
மாதங்கி மரகத மணி
மீனாட்சி நீதாடி... மீனாட்சி நீதாடி

ஒரு வழிப் பாதையில் தனியா நான்
தவிச்சு தவிச்சு மனம் துடிக்கணுமா
ஒரு வழிப் பாதையில் தனியா நான்
தவிச்சு தவிச்சு மனம் துடிக்கணுமா
வாடி மீனாட்சி வழித் துணையாய் காமாட்சி
← Back to Dorothy

Keep listening

More from this movie

  1. Kalyana Virundhu கல்யாண விருந்து

    Sung by Yugendran, Anthony Daasan, Priya Jerson

  2. Muthumani முத்துமணி

    Sung by Ilaiyaraaja, Shweta Mohan