Kootipoo Koodavae artwork

Song lyrics

Kootipoo Koodavae

கூட்டிப்போ கூடவே

9327 views

Singer · Ranina Reddy, Sathya Prakash

Lyrics · Lalithanand

The lyrics

நீ யாரோ யாரோ
நீ யாரோ!
நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்!

போகாத சாலை
பொன் வேளை!
வான் காணா வானிலை!
நேராத ஏதோ நேரலை!

நீ யாரோ யாரோ
நீ யாரோ!
நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்!

போகாத சாலை
பொன் வேளை!
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை!

அண்மையில் நீ பார்த்து நிற்கின்ற நேரம்...
மென்மையாய் கைகோர்த்துப் போகவே...!
மெதுவாய் மேல்நாட்டு மேகம் ஏங்கும்...  
நகரா நாள் வேண்டுமே வேண்டுமே!

ஆகாயம் தாண்டியும் கூட்டிப்போ கூடவே!
ஆளில்லாத் தீவுகள் 
கூட்டிப்போ கூடவே!
காணாத வேறிடம் 
கூட்டிப்போ கூடவே!
வாழாத ஓரிடம் 
கூட்டிப்போ கூடவே!

நிகழாத சூழல்...
நிகர் இல்லாத முதல் காட்சியே!
அழகே நீ தந்தாய் 
என் வாழ்வையே!
ஒளி பாயும் காலம்...
குளிர் ஏதேதோ ஆசை கூட்டுதே!
அடைந்தேனே உன்னை...
அடையாளமே! 
பாதாதி கேசம் தோன்றாத மாற்றமே!
பாராத தேசம் வாராத வாசமே!
ஆகாயம் தாண்டியும்...
கூட்டிப்போ கூடவே!
ஆளில்லாத் தீவுகள்...
கூட்டிப்போ கூடவே!
காணாத வேறிடம்...
கூட்டிப்போ கூடவே!
வாழாத ஓரிடம்... 
கூட்டிப்போ கூடவே!
நீ யாரோ யாரோ
நீ் யாரோ!
நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்!
போகாத சாலை!
பொன் வேளை!
வான் காணா வானிலை!
நேராத ஏதோ நேரலை!
உன்னுடன் நான் சேர்ந்து போகின்றபோது...
உண்மையில் தோள்சாயத் தோன்றுதே!
உணர்வில் நீ பூத்து நிற்கின்றபோது...
உணரா ஒரு வாசமே வாசமே!
ஆகாயம் தாண்டியும்...
கூட்டிப்போ கூடவே!
ஆளில்லாத் தீவுகள்...
கூட்டிப்போ கூடவே!
காணாத வேறிடம்...
கூட்டிப்போ கூடவே!
வாழாத ஓரிடம்... 
கூட்டிப்போ கூடவே!

Dedicated for Kutty
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Junga

Keep listening

More from this movie

  1. Kootipoo Koodavae கூட்டிப்போ கூடவே

    Sung by Ranina Reddy, Sathya Prakash

  2. Rise Of Don Rise Of Don

    Sung by Suraj Jagan, Siddharth Vipin, Rockstar Ramani Ammal, Emcee Jesz

  3. Parrys To Paris Parrys To Paris

    Sung by Kalpana Raghavendar, Anthony Daasan

  4. Amma Mela Sathiyam அம்மா மேல சத்தியம்

    Sung by Jagadeesh Kumar, Pavithra Gokul

  5. Amma Mela Sathiyam அம்மா மேல சத்தியம்

    Sung by Jagadeesh Kumar, Pavithra Gokul

  6. Makkal Selvan மக்கள் செல்வன்

    Sung by Suraj Jagan, Jagadeesh Kumar

  7. Lolikriya லோலிகிரியா

    Sung by Marana Gana Viji, Nakash Aziz