Kaadhal Vandhadhum artwork

Song lyrics

Kaadhal Vandhadhum

காதல் வந்ததும்

71575 views

Singer · K. J. Yesudas, Sadhana Sargam

Lyrics · Vairamuthu

The lyrics

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை.. ஆ…..

தூங்காத காற்றே துணை தேடி ஒடி
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா

நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா

உள்ளே என்னால் அரும்பானது
உன்னால் இன்று ருதுவானது

நான் அதை சோதிக்கும் நாள் வந்தது

தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நீ வந்து போனால் என் தோட்டமெங்கும்
உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம்

நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்

கனா வந்தால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்

போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய்

தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு

தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Poovellam Un Vasam

Keep listening

More from this movie

  1. Chella Namm Veetuku செல்லா நம் வீட்டுக்கு

    Sung by Harish Raghavendra, Malaysia Vasudevan, Sujatha

  2. Pudhu Malar Thottu புதுமலர் தொட்டு

    Sung by Sriram Parthasarathy

  3. Yukthamukhi Yukthamukhi யுக்தாமுகி யுக்தாமுகி

    Sung by Clinton Cerejo, Devan

  4. Kaadhal Vandhadhum காதல் வந்ததும்

    Sung by K. J. Yesudas, Sadhana Sargam

  5. Thirumana Malargal திருமண மலர்கள்

    Sung by Swarnalatha

  6. Thalaattum Kaatre தாலாட்டும் காற்றே

    Sung by Shankar Mahadevan