Yennodu Vaa Va artwork

Song lyrics

Yennodu Vaa Va

என்னோட வா வா

90593 views

Singer · Karthik

Lyrics · Na. Muthukumar

The lyrics

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையால் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்க்காதடி....
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகனமே
காதல் அதை பொறுக்கனுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைக்கனுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Neethane En Ponvasantham

Keep listening

More from this movie

  1. Kaatrai Konjam காற்றைக் கொஞ்சம்

    Sung by Karthik

  2. Yennodu Vaa Va என்னோட வா வா

    Sung by Karthik

  3. Mudhal Murai முதல் முறை

    Sung by Sunidhi Chauhan

  4. Saindhu Saayndhu சாய்ந்து சாய்ந்து

    Sung by Yuvan Shankar Raja, Ramya NSK

  5. Sattru Munbu சற்று முன்பு பார்த்த

    Sung by Ramya NSK

  6. Pengal Yendral பெண்கள் என்றால்

    Sung by Yuvan Shankar Raja

  7. Pudikale Maamu பிடிக்கல்ல மாமு

    Sung by Suraj Jagan, Karthik

  8. Vaanam Mella வானம் மெல்ல

    Sung by Ilaiyaraaja, Bela Shende