Unnaithane artwork

Song lyrics

Unnaithane

உன்னைத்தானே தஞ்சம்

39450 views

Singer · K. J. Yesudas, Manjula

Lyrics · Vairamuthu

The lyrics

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
உன்னைத்தானே….

மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?

என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
என்னைத்தானே…

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது

என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nallavanuku Nallavan

Keep listening

More from this movie

  1. Vechukava Onna வச்சிக்கவா ஒன்ன மட்டும்

    Sung by K. J. Yesudas, S. Janaki

  2. Unnaithane உன்னைத்தானே தஞ்சம்

    Sung by K. J. Yesudas, Manjula

  3. Muthaduthey முத்தாடுதே முத்தாடுதே

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  4. Chittuku Chella Chittuku சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு

    Sung by K. J. Yesudas

  5. Namma Mothali நம்ம முதாலாளி

    Sung by Malaysia Vasudevan, S. P. Balasubramaniam