Song lyrics
Enna Nenache Nee
என்ன நெனச்சே நீ
19138 views
Singer · Anuradha Sriram, P. Unnikrishnan
Lyrics · R. V. Udayakumar
The lyrics
என்ன நெனச்சே நீ என்ன நெனச்சே
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு தெச்ச போது
சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
நான் சொக்கத் தங்கம் கிட்டியதால் துள்ளிக் குதிச்சேன்
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
ஒன்ன நெனச்சேன் நான் ஒன்ன நெனச்சேன்
எந்தப் பூர்வ ஜென்ம புண்ணியமோ ஒன்ன அடஞ்சேன்
நாங்காடு சிற்பம் உன்னோட வெப்பம்
நான் தொட்டுப் பாக்குறப்போ என்ன நெனச்சே
தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
உன் கன்னக் குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்சே
என் நெஞ்சுக் குழி மீதும் ஒண்ணு கேக்க நெனச்சேன்
என் பேராச நூறாச கேக்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சேடி
ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்
ஒன்ன ஒட்டு மொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்
ஒன்ன ஒட்டு மொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
மெத்தைக்கு மேல உன்னோட சேல
என் கையில் சிக்கும் வேள என்ன நெனச்சே
எப்போதும் போல ஒன்னோட வேல
ஆரம்பமாச்சுதுன்னு நானும் நெனச்சேன்
நீ உள் காயத்த பாக்குறப்போ என்ன நெனச்சே
நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்
நாம் ஒண்ணோடு ஒண்ணாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்கும்னு நெனச்சையா
கல்யாண சொர்க்கத்துல கச்சேரி நேரமுன்னு
கட்டிப் புடிச்சேன் நான் கட்டிப் புடிச்சேன்
என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டிப் புடிச்சேன்
சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளிக் குதிச்சேன்
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
ஒன்ன நெனச்சேன் நான் ஒன்ன நெனச்சேன்
எந்தப் பூரவ ஜென்ம புண்ணியமோ ஒன்ன அடஞ்சேன்
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oor Oora Pokura ஊர் ஊரா போகுற மேக
Sung by S. P. Balasubramaniam
-
Ettu Jilla Pathirukka எட்டு ஜில்லா பாத்திருக்க
Sung by Anuradha Sriram, Karthik, Unni Menon
-
En Jannal Nilavukku என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
Sung by Hariharan, Sadhana Sargam
-
Enna Nenache Nee என்ன நெனச்சே நீ
Sung by Anuradha Sriram, P. Unnikrishnan
-
Vellaiyai Manam Pillaiyai வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்
Sung by Swarnalatha, P. Jayachandran, Sujatha Mohan