Nilave Mugam artwork

Song lyrics

Nilave Mugam

நிலவே முகம்

57127 views

Singer · S. Janaki

Lyrics · Vaali

The lyrics

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

ஆண் : நிலவே முகம் காட்டு

***

பெண் : பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண் : காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

பெண் : நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண் : எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

பெண் : அணைத்தேன் உனையே இது தாய் மடியே

***

ஆண் : சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை மீறும் கண்ணின் நீரென்றால்
தினம் துடிப்பவன் நானே

பெண் : மாலையோடு நடக்கும் தேரய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரய்யா
உன்னை மீற யாரய்யா

ஆண் : மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

பெண் : இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

ஆண் : இளம் பூங்கொடியே இது தாய் மடியே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ejamaan

Keep listening

More from this movie

  1. Oru naalum ஒரு நாளும் உனை

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki

  2. Nilave Mugam நிலவே முகம்

    Sung by S. Janaki

  3. Aalapol Velapol ஆலப்போல் வேலப்

    Sung by S. P. Balasubramaniam

  4. Raakku Muthu அடி ராக்குமுத்து

    Sung by S. P. Balasubramaniam

  5. jamaan Kaladi எஜமான் காலடி

    Sung by Malaysia Vasudevan