Adada Mazhaida artwork

Song lyrics

Adada Mazhaida

அடடா மழைடா

68260 views

Singer · Rahul Nambiar, Saindhavi

Lyrics · Na. Muthukumar

The lyrics

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு
குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Paiyaa

Keep listening

More from this movie

  1. Thuli Thuli Thuli Malayai துளி துளி துளி மழையாய் வந்தாளே

    Sung by Haricharan, Tanvi Shah

  2. En Kadhal Solla என் காதல் சொல்ல

    Sung by Tanvi Shah, Yuvan Shankar Raja

  3. Poongatre Poongatre பூங்காற்றே பூங்காற்றே

    Sung by Benny Dayal

  4. Adada Mazhaida அடடா மழைடா

    Sung by Rahul Nambiar, Saindhavi

  5. Suthuthe Suthuthe சுத்துதே சுத்துதே பூமி

    Sung by Karthik, Sunitha Sarathy

  6. Yedho Ondru ஏதோ ஒன்று என்னை

    Sung by Yuvan Shankar Raja