Kattre Poongattre artwork

Song lyrics

Kattre Poongattre

காற்றே பூங்காற்றே

71612 views

Singer · K. S. Chithra

Lyrics · Pa. Vijay

The lyrics

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா 
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா 
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா 
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா 
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா 

நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும் 
எப்போதுமே ஓடும் நதியாகலாம் 
ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே 
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே

அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே 
ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே

தோழனே தோழனே ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது 
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா 
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று 
அணை கட்டினால் அது ஓய்வதில்லை 
மழை தூறுமே என்று நடுவானிலே வந்து 
திரை கட்டினால் மழை முடிவதில்லை

எரிமலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது 
ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது

உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது 
இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா 
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா 
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா 
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Priyamaana Thozhi

Keep listening

More from this movie

  1. Vaanam Enna Vaanam வானம் என்ன வானம்

    Sung by Hariharan

  2. Kattre Poongattre காற்றே பூங்காற்றே

    Sung by K. S. Chithra

  3. Entha Theesathil எந்த தேசத்தில்

    Sung by Hariharan

  4. Penne Neyum Pennaa பெண்ணே நீயும்

    Sung by Unni Menon, Kalpana

  5. Maankutty Maankutty மான் குட்டியே

    Sung by Hariharan, Sadhana Sargam, Sujatha

  6. Rojakale ரோஜாக்களே நம்

    Sung by Mahalakshmi Iyer