Koora Podava Katti artwork

Song lyrics

Koora Podava Katti

நல்லது நடக்க அம்மன

2935 views

Singer · Malasiya Vasudevan, K. S. Chitra

Lyrics · Gangai Amaran

The lyrics

பெண் : நல்லது நடக்க அம்மன நெனச்சு
கும்மியடியுங்க பெண்டுகளா
தந்தானானன தந்தானானன தந்தானானன தந்தானா
எப்பவும் நமக்கு நிம்மதி கிடைக்கும்
அம்மனை நெனைங்க பெண்டுகளா
தந்தானானன தந்தானானன தந்தானானன தந்தானா

ஆண் : கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி
தேரப் போல வரும் செல்லம்மா
பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி
நாளப் பாத்து வந்து சொல்லம்மா

நீ இஷ்ட்டப்பட்டா உன்ன வச்சுக்கிறேன்
என் நெஞ்சில் வச்சு உன்ன தச்சுக்கிறேன்

பெண் : வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி
நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா
அட நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி
வீணா மல்லுக்கட்ட வந்தியா

ஆண் : வாடி ரதமே கொதிக்குது மனமே
நாடி நரம்புக துடிக்குது தெனமே
கோடி சுகத்த கொடுக்கிறேன் நெசமே
கூடி அணைக்க வாடி என் வசமே

பெண் : மாமன் உனக்கு வெக்கமில்ல
வேற எதுக்கும் லாயக்கில்ல
ஆசை இருக்கு உள்ளுக்குள்ள
ஆனா நான்தான் சின்னப் புள்ள
ஆண் : மயிலே..ஆஹாங்...குயிலே..ம்ஹூம்
அள்ளவா கிள்ளவா மெல்ல வா

பெண் : வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி
நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா
ஆண் : பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி
நாளப் பாத்து வந்து சொல்லம்மா

பெண் : கம்ப புடிக்கிற வயசுல பாரு
கன்னியப் பாத்ததும் ஏறுது ஜோரு
யாரு என்னத்தான் எதிர்க்கிற ஆளு
நான் ஊரு முழுசையும் முழுங்குற ஆளு

ஆண் : யானைப் புடிக்கும் ஆம்பள நான்
மானப் புடிக்க கஷ்டமில்ல
மானே உன்ன நான் தொட்டுப்புட்டா
ஊரில் யாரும் மிச்சமில்லை
பெண் : நெசமா...ஆமா....அய்யய்யோ...வாம்மா
தள்ளியே நில்லய்யா செல்லைய்யா

ஆண் : கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி
தேரப் போல வரும் செல்லம்மா..
யம்மா.....ஹாங்.....யம்மா.....ஹாங்...யம்மா
பெண் : நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி
வீணா மல்லுக்கட்ட வந்தியா
ஆண் : நீ இஷ்ட்டப்பட்டா உன்ன வச்சுக்கிறேன்
என் நெஞ்சில் வச்சு உன்ன தச்சுக்கிறேன்

பெண் : வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி
நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா
ஆண் : பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி
நாளப் பாத்து வந்து சொல்லம்மா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Koyil Maniyosai

Keep listening

More from this movie

  1. Aandavan Yaaraiyum ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

    Sung by K. J. Jesudass

  2. Odappatti Pichamuthu ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக

    Sung by K. S. Chitra

  3. Kala Kala Kalavena கல கல கலவென காவிரி

    Sung by Gangai Amaran, K. S. Chitra

  4. Koora Podava Katti நல்லது நடக்க அம்மன

    Sung by Malasiya Vasudevan, K. S. Chitra

  5. Pulla Pulla Vayasu Pulla புள்ள புள்ள வயசு

    Sung by Mano, K. S. Chitra