Yaar Intha Muyal Kutti artwork

Song lyrics

Yaar Intha Muyal Kutti

யார் இந்த முயல் குட்டி

57228 views

Singer · Armaan Malik

Lyrics · Vairamuthu

The lyrics

யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி
வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி

தீயில் எரியும் மூங்கில் காட்டில்
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்
பர பரப்பான போக்குவரத்தில்
பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி

அழகை நீட்டி ஆளை இழுத்தாய்
அச்சத்தாலே ஆசீர்வதித்தாய்
பார்த்த பார்வையில் பச்சை குத்தினாய்
பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய்
உந்தன் பின்னால் நான் வருவேனோ
எந்தன் பின்னால் நீ வருவாயோ
சாலை கடக்க முடியும் உன்னால்
உன்னை கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்.....
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி

ஒரு கை காட்டி என்னை அழைத்தாள்
இரு கை நீட்டி ஏந்தி கொள்வேன்
பெண்ணே நீயும் சாலை கடந்தால்
பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன்

சாலை கடந்தால் மறப்பாயோ
சாகும் வரையில் மறப்பேனோ
சாலை கடக்க முடியும் உன்னால்
உன்னை கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்.....
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி

வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்
யார் இந்த முயல் குட்டி
தீயில் எரியும் மூங்கில் காட்டில்
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்
பர பரப்பான போக்குவரத்தில்
பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்
யார் இந்த முயல் குட்டி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Paayum Puli

Keep listening

More from this movie

  1. Silukku Marame சிலுக்கு மரமே

    Sung by Divya Kumar, Shashaa Tirupati, Sharanya Gopinath

  2. Marudakkaari மருதக்காரி

    Sung by Diwakar

  3. Naa Soodana Mogini நான் சூடான மோகினி

    Sung by Jyoti Nooran

  4. Yaar Intha Muyal Kutti யார் இந்த முயல் குட்டி

    Sung by Armaan Malik

  5. Puli Puli Paayum Puli புலி புலி பாயும் புலி

    Sung by Malgudi Subha