Poonkatrae  artwork

Song lyrics

Poonkatrae

பூங்காற்றே கொஞ்சம்

20256 views

Singer · Hariharan

Lyrics · Palani Barathi

The lyrics

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா
மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ அருகில் வந்து.

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

அலைகளாய் ஆடுதே அன்பெனும் உள்ளங்களே
அனலிலே உருகுதே மெழுகு போல் சொந்தங்களே
பாடிடும் குயில் தோப்பில் யார் அம்பு எய்தார்
வீணையை விறகாக யார் இங்கு காண்பார்
காலமே உன் லீலையே இனி மாறுமோ!

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால் பிரிந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம்
மாலையை சேராமல் என்ன இந்த மாற்றம்
ஓவியம் உருவாகுமோ சுவரின்றியே!

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா
மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ அருகில் வந்து.

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா.
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Friends

Keep listening

More from this movie

  1. Manjal Poosum மஞ்சள் பூசும்

    Sung by Devan, Sujatha

  2. Rukku Rukku ருக்கு ருக்கு

    Sung by Vijay Yesudas, Yuvan Shankar Raja

  3. Kuyilikku Koo Koo குயிலுக்கு கூ கூ

    Sung by Hariharan, S. P. Balasubramaniam, Shankar Mahadevan

  4. Thendral Varum தென்றல் வரும் வழியை

    Sung by Bhavatharani, Hariharan

  5. Vaanam Perusuthan வானம் பெரிசுதான்

    Sung by S. P. Balasubramaniam, Vijay Yesudas

  6. Poonkatrae பூங்காற்றே கொஞ்சம்

    Sung by Hariharan

  7. Penkaloda Potti பெண்களோடு போட்டி

    Sung by Hariharan, Sujatha