Thangapadkathin artwork

Song lyrics

Thangapadkathin

தங்க பதக்கத்தின் மேலே

22365 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ

முல்லை பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்ல தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவது உண்டு
அழகு நடையை பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே (தங்க)

பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து
பக்கம் நடந்தது என்ன ?
உயிர் காதல் தலைவன் காவல் இருக்க
தொட்டு இழுத்தது என்ன ?
பனியில் நனையும் மலரின் உடலில் குளிர் எடுக்கதோ ? ஒருவன் மடியில் மயங்கும் பொழுது சுகம் பிறக்கதோ ? (தங்க பதக்கத்தின்) மேலே

கொத்தோடு முத்தாட வஞ்சி கொடியை
தொட்டு தொடர்ந்தது என்ன
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
ஊரும் உறவும் அறியும் வரையில்
கண்கள் மட்டோடு
மண மாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாடு
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ
← Back to Engal Thangam

Keep listening

More from this movie

  1. Dont Touch Mr X பொம்பளைக்கு பொம்பளை

    Sung by L. R. Eswari, T. M. Soundararajan

  2. Naan Alavodu Rasipavan நான் அளவோடு ரசிப்பவன்

    Sung by P. Susheela, Soundarya

  3. Naan Sethu Pulachavanda நான் செத்துப் பொழச்சவன்டா

    Sung by T. M. Soundararajan

  4. Mogam Piranthadamma மோகம் பிறந்ததம்மா

    Sung by T. M. Soundararajan

  5. Thangapadkathin தங்க பதக்கத்தின் மேலே

    Sung by P. Susheela, T. M. Soundararajan