Anbe Vaa artwork

Song lyrics

Anbe Vaa

உள்ளம் என்றொரு

13967 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா அன்பே வா வா வா வா


நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பாதையிலே வெளிச்சமில்லை
பகல் இரவு புரியவில்லை
பார்வையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை
உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா அன்பே வா வா வா வா


வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே
போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்
உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா அன்பே வா வா வா வா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Anbe Vaa

Keep listening

More from this movie

  1. Pudhiya Vaanam புதிய வானம்

    Sung by T. M. Soundararajan

  2. Love birds தக்கத்திமிதா

    Sung by P. Susheela

  3. Raajavin Paarvai ராஜாவின் பார்வை

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Naan Paarthathilae நான் பார்த்ததிலே

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Anbe Vaa உள்ளம் என்றொரு

    Sung by T. M. Soundararajan

  6. Nadodi Nadodi எ நாடோடிநாடோடி

    Sung by L. R. Eswari, P. Susheela, T. M. Soundararajan, A. L. Raghavan

  7. Once A Pappa once a pappa

    Sung by A. L. Raghavan and Chorus

  8. Vetkammilai வெட்கம் இல்லை

    Sung by P. Susheela and Chorus