Ayayayoo Aananthamey artwork

Song lyrics

Ayayayoo Aananthamey

அய்யய்யயே ஆனந்தமே

118341 views

Singer · Haricharan

Lyrics · Yugabharathi

The lyrics

அய்யய்யயோ ஆனந்தமே (ஆ)
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏதோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ...

அய்யய்யய்யோ... ஓ... ஓ... அய்யய்யய்யோ...

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தோடுதே... சுடுதே... மனதே...

அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனணத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காகக் கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போகத் தேதி பார்க்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா.....

அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏதோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யயோ...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kumki

Keep listening

More from this movie

  1. Sollitaley Ava Kaadhala செல்லிட்டாலே அவ காதல

    Sung by K.J.Ranjith, Shreya Ghoshal

  2. Yella Oorum எல்லா ஊரும்

    Sung by Benny Dayal, D. Imman

  3. Onnum Puriyala ஒன்னும் புரியல

    Sung by D. Imman

  4. Ayayayoo Aananthamey அய்யய்யயே ஆனந்தமே

    Sung by Haricharan

  5. Soi Soi கையலவு நெஞ்சத்திலா

    Sung by Magizhini Manimaaran

  6. Nee Yeppo Pulla நீ யெப்போ புள்ள

    Sung by Alphons Joseph