Kaatukkulle Thiruvizha artwork

Song lyrics

Kaatukkulle Thiruvizha

காட்டுக்குள்ளே திருவிழா

8484 views

Singer · P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி
சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி
சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே அவள்
கண்மயங்கி ஓடுகின்றாள் வழியிலே அவள்
கண்மயங்கி ஓடுகின்றாள் வழியிலே

காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்

தென்றலெனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள்
சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
தென்றலெனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள்
சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
மங்களமாய் மூங்கிலிலே நாயனமாம்
மங்களமாய் மூங்கிலிலே நாயனமாம் பச்சை
வாழையுடன் மாவிலையும் தோரணமாம் பச்சை
வாழையுடன் மாவிலையும் தோரணமாம்

காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்

வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே
வந்தவரை அமர்கவென்பாள் கிளியம்மா
வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே
வந்தவரை அமர்கவென்பாள் கிளியம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா இந்த
அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா? இந்த
அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா?

காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thaai Sollai Thattadhe

Keep listening

More from this movie

  1. Kaatukkulle Thiruvizha காட்டுக்குள்ளே திருவிழா

    Sung by P. Susheela

  2. Oruthi Maganai ஒருத்தி மகனாய்ப்

    Sung by P. Susheela

  3. Paattu Oru Paattu பாட்டு ஒரு பாட்டு

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Pattu Selai Kaathaada பட்டுச் சேலை காத்தாட

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Poo Uranguthu பூவுறங்குது பொழுதும்

    Sung by P. Susheela

  6. Pooyum Pooyum போயும் போயும்

    Sung by T. M. Soundararajan

  7. Sirithu Sirithu சிரித்துச் சிரித்து

    Sung by P. Susheela, T. M. Soundararajan