Oh Shanthi Shanthi artwork

Song lyrics

Oh Shanthi Shanthi

ஒ சாந்தி சாந்தி

111893 views

Singer · Clinton Cerejo, S.P.B. Charan

Lyrics · Thamarai

The lyrics

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே

இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி… ஒ

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும் நேரம் வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா

விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க….
எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vaaranam Aayiram

Keep listening

More from this movie

  1. Adiye Kolluthey அடியே கொல்லுதே

    Sung by Benny Dayal, Krish, Shruti Haasan

  2. Ava enna enna அவ என்ன என்ன தேடி

    Sung by Karthik, Prasanna

  3. Nenjukkul Peidhidum நெஞ்சுக்குள் பெய்திடும்

    Sung by Devan, Hariharan, Prasanna

  4. Annal Mele Panithuli அனல் மேலே பனித்துளி

    Sung by Sudha Raghunathan

  5. Mundhinam Parthene முன்தினம் பார்த்தேனே

    Sung by Naresh Iyer &Prashanthini

  6. Oh Shanthi Shanthi ஒ சாந்தி சாந்தி

    Sung by Clinton Cerejo, S.P.B. Charan

  7. Yethi Yethi Yeththi ஏத்தி ஏத்தி ஏத்தி

    Sung by Benny Dayal, Naresh Iyer, Solar Sai