Puli Title Song artwork

Song lyrics

Puli Title Song

எங்கமக்கா எங்கமக்கா

27576 views

Singer · Mano, Priyadarshini

The lyrics

எங்கமக்கா எங்கமக்கா
ஓடிவாங்க எங்கமக்கா
எங்கமக்க ஒண்ணுபட்டா
எதிரிக்கெல்லாம் டங்கணக்கா

காத்திருக்க நேரம் இல்லடா
தெம்மாங்கு பாடும்
காத்துக்கென்ன கைவிலங்கு போடா

கத்தி புத்தி ரெண்டும் உண்டடா
என் பாசமுள்ள
தம்பி தம்பி நம்பி நம்பி வாடா

கொடுமையெல்லாம் அடிபடவே
அடிமை இனம் விடுபடவே
கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க
எழுந்து வருகுதே…
ஏய் புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி

மண்ணைவிட்டு
விண்ணைத்தொட்டு சுற்றிவரும் சூரப்புலி
புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி
அச்சம் விட்டு உச்சம்தொட்டு வெற்றிபெறும் வீரப்புலி


மண்ணை மீறாமலே
விதையும் முளைக்குமா?
தறிபடாத நூலு என்ன ஆடையாகுமா?

எங்கள் தாய் நாட்டையே
வஞ்சம் வந்தாளுமா?
புலிக்குகையில் எலிவந்து வாலை ஆட்டுமா?

உன்னை நீ நம்பி உழைத்தே பாரு
ஊரு தன்னாலே மாறாது

மாற்றம் உன்னோடு தொடங்கட்டும் தோழா
நான் விழிக்கும் போது
எனது கனவு பலிக்கவேண்டுமே

புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி

ஆந்தை பருந்துமே
வானில் பறக்குதே
அழகுமிக்க கிளிகள் மட்டும் கூண்டில் வாடுதே

எங்கள் தாய்நாட்டிலே
எல்லாம் பாழாகுதே
எங்க மண்ணும் எங்க வீடும்
ஏலம் போகுதே

சித்தம் கொதிக்குதே
ரத்தம் தீயாகுதே
யுத்தம் செய்ய வருகவென்று
சத்தம் கேட்குதே

திட்டம் இருக்கணும்
தொட்டா ஜெயிக்கணும்
நான் தொட்டுவைத்த திட்டம் ஏதும்
தோற்றதில்லையே

வானம் எப்போதும் தீர்ந்தா போகும்
வாழ்வில் நம்பிக்கை தீராதே

நாளை நம்கையில் வந்தே தீரும்
வலது காலை
எடுத்து வாடா இளைய தோழா

புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Puli

Keep listening

More from this movie

  1. Yaendi Yaendi ஏண்டி ஏண்டி என்ன மாத்துற

    Sung by Shruti Haasan, Vijay

  2. Jingiliya Jingiliya ஜிங்கிலியா ஜிங்கிலியா

    Sung by Javed Ali, Pooja AV

  3. Manitha Manitha மனிதா மனிதா

    Sung by Tippu

  4. Mannavanae Mannavanae மன்னவனே மன்னவனே

    Sung by Sooraj Santhosh, MLR Karthikeyan, Chinmayi, Anitha

  5. Puli Title Song எங்கமக்கா எங்கமக்கா

    Sung by Mano, Priyadarshini

  6. Sottavaala சொட்டவாள சொட்டவாள

    Sung by M. M. Manasi, Shankar Mahadevan