Unmayein Siripai Rasikiraen artwork

Song lyrics

Unmayein Siripai Rasikiraen

உண்மையின் சிரிப்பை

3678 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது
ஹஹஹா ஹஹஹா ஒஹொஹொ

சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே
சிரிப்பதும் கிடையாது
பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக
வாழ்வதும் கிடையாது
சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்
உலகம் பழிக்காது
பெரும் தொல்லையில் சிரிக்கும்
தைரியம் இருந்தால்
துன்பங்கள் நெருங்காது
(உண்மையின் சிரிப்பை ...)


ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை
மிருகமும் செய்யாது
ஏழை குடும்பங்கள் அழுது சிந்திய கண்ணீர்
சும்மா போகாது
அடிக்கடி மாறும் மனிதர்கள் கூறும்
அறிவுரை செல்லாது
இங்கே அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால்
சிறையே கொள்ளாது
ஹஹஹா ஹஹஹா ஓஹொ ஹோ

எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kanavan

Keep listening

More from this movie

  1. Adi Aathi Nee Yaruku Pethi அடியாத்தி யாருக்கு நீ பேத்தி

    Sung by T. M. Soundararajan

  2. Ennaporuthamadi Mama என்ன பொருத்தமடி மாமா

    Sung by L. R. Eswari

  3. Mayngum Vayathu மயங்கும் வயது

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Neenga Nencha Nadakatha நீங்க நெனச்சா நடக்காதா

    Sung by P. Susheela

  5. Unmayein Siripai Rasikiraen உண்மையின் சிரிப்பை

    Sung by T. M. Soundararajan