Yen Pennendru (Solo) artwork

Song lyrics

Yen Pennendru (Solo)

ஏன் பெண்ணென்று

34430 views

Singer · P. Unnikrishnan

Lyrics · Vairamuthu

The lyrics

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்

நீ எங்கே சென்று சேர்ந்தாலும்
உன் நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும்
நீ தீண்டிவிட்டால் உயிர்ப்பேன்
ஒருமுறை உன்னை பார்க்க துடிக்குது உள்ளம்
காவிரி நதி தாண்டும் கண்களின் வெள்ளம்
காதல் உறவை எரித்திடுமா
இதுதான் காதல் சரித்திரமா

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Love Today

Keep listening

More from this movie

  1. Monica Monica மோனிகா மோனிகா

    Sung by Suresh Peters, Fepi Mani

  2. Salamiya Salamiya சலாமியா சலாமியா

    Sung by Mano, Malgudi Subha

  3. Aalai Ethi Pogum மச்சி கமான் கமான்

    Sung by Mano, Kalpana

  4. Kuppayi Kuppayi குப்பாயி குப்பாயி

    Sung by Yugendran

  5. Enna Azhagu என்ன அழகு எத்தனை

    Sung by Vairamuthu

  6. Yen Pennendru (Solo) ஏன் பெண்ணென்று

    Sung by P. Unnikrishnan

  7. Yen Pennendru (Duet) ஏன் பெண்ணென்று

    Sung by Mohammed Aslam, Bombay Jayashri