Pookum Malarai artwork

Song lyrics

Pookum Malarai

பூக்கும் மலர்கள் கைகள்

9586 views

Singer · Hariharan

Lyrics · Pazhani Bharathi

The lyrics

பூக்கும் மலர்கள் கைகள் குலுக்கி
தென்றல் சொல்லும் காலை வணக்கம்
ஓஹோ அலார சேவல் அதிகாலை
மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள்
அன்னை வயல்கள் பிள்ளை மனங்கள்
உள்ளம் திறந்து பேசும் ஜனங்கள்
(பூக்கும்..)

சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே
கோடி செல்வம் எதற்கு
நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே
உறவு போதும் எனக்கு
(சின்ன..)
பச்சை தாளில் வெள்ளை எழுத்து
கள்ளி செடியில் காதல் கவிதை
கிச்சு கிச்சு யார் மூட்டிவிட்டது
வெடித்து சிரிக்கும் பருத்தி செடிகள்
ஓஹோ பட்டு பூக்கும் புல் வெளிகள்
இவை அல்லவா சுக வரங்கள்
(சின்ன..)

பின்னல் செடி விழுந்து ஊஞ்சல் ஆட கொடுக்கும்
ஆலமரம் கூட தோழி எனக்கு
(பின்னல்..)
சேர் படிந்த வேட்டி மெல்லிய செருப்பு
மாலை சந்தை கூச்சல் இசை எனக்கு
கைகளை நீட்டி நிலவை தொடும்
யோகம் வேண்டும் எனக்கு
யோகம் வேணும் எனக்கு
யோகம் வேண்டும் எனக்கு
(சின்ன..)
கோடி செல்வம் எதற்கு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Udhaya

Keep listening

More from this movie

  1. Pookum Malarai பூக்கும் மலர்கள் கைகள்

    Sung by Hariharan

  2. Udhaya Udhaya உதயா உதயா உளருகிறேன்

    Sung by Hariharan, Sadhana Sargam

  3. Ketti Mezla Saththathila கெட்டிமேள சத்தத்தில

    Sung by Shankar Mahadevan, Gopika Poornima

  4. Anjanam அஞ்சனம் வச்ச

    Sung by S. P. Balasubramaniam

  5. Thiruvallikeni Rani திருவல்லிக்கேணி ராணி

    Sung by Karthik, Sukhwinder Singh