Sendru vaa

Song lyrics

Sendru vaa

சென்று வா மகனே

10480 views

Singer · K. B. Sundarambal

Lyrics · Kannadasan

The lyrics

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

உண்மையைச் சொல்வதற்கு படிப்பெதற்கு
எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு
கண் கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு
நெஞ்சில் கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாகக் குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
இந்தத் தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்தச் சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mahakavi Kalidas

Keep listening

More from this movie

  1. Malarum Vaan Nilavum மலரும் வான் நிலவும்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  2. Sendru vaa சென்று வா மகனே

    Sung by K. B. Sundarambal

  3. Kaalathil Azhiyatha காலத்தில் அழியாத

    Sung by K. B. Sundarambal

  4. Yaar Tharuvar யார் தருவார் இந்த

    Sung by T. M. Soundararajan

  5. Kallai vanthavan கல்லாய் வந்தவன்

    Sung by T. M. Soundararajan