Vinnil Vinmeen artwork

Song lyrics

Vinnil Vinmeen

விண்ணில் விண்மீன் ஆயிரம்

6679 views

Singer · Nikitha Harris

Lyrics · Vairamuthu

The lyrics

விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று

விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று

உடல் நிறம் மாறலாம்
உயிர் நிறம் ஒன்றுதான்
பேரன்பால் ஒன்றாய் சேரும்
தேசம் நன்றுதான்

தொழும் முறை மாறலாம்
இறை என்று ஒன்றுதான்
நம் ஈஸ்வர் அல்லா தேவன்
எல்லாம் ஒன்றுதான்

விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று


விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று

ஒற்றை தேசம் என்றும்
ஒற்றை வாழ்க்கை என்றும்
யார் நினைத்தாலும் திணித்தாலும்
நிறைவேறுமா

பல வண்ணங்களால்
செய்த ஓவியம் போல்
ஒரு நிறம் கொண்ட படம் என்றும்
அழகாகுமா

வேற்றுமையில் அழகியல் உண்டு
வேற்றுமையில ஒற்றுமை நன்று
சகிப்பென்னும் பண்பாடு
படைத்த நிலம் இது

ஆஹ் விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaappaan

Keep listening

More from this movie

  1. Siruki Seeni Katti சிறுக்கி சீனி கட்டி

    Sung by Senthil Ganesh, Ramani Ammal, Vishal Dadlani

  2. Vinnil Vinmeen விண்ணில் விண்மீன் ஆயிரம்

    Sung by Nikitha Harris

  3. Hey Amigo ஹேய் மி அமிகோ

    Sung by Leslie Lewis, Jonita Gandhi, Blaaze

  4. Kurilae Kurilae குறிலே குறிலே குயிலே

    Sung by Javed Ali, Darshana KT, Arijit Singh, Papon Sanjith Hegde

  5. Machan Inga Vandhira மச்சான் இங்க வந்திரா

    Sung by Kharesma Ravichandran, Nikhita Gandhi, Shabnam