Kannamma artwork

Song lyrics

Kannamma

கண்ணம்மா

211385 views

Singer · Pradeep Kumar and Dhee

Lyrics · Uma Devi

The lyrics

பூவாக என் காதல் தேனூருதோ
தேனாக தேனாக வானூருதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

உன் காதல் வாசம்
என் தேகம்  பூசும்
காலங்கள் பொய்யானதே

தீராத காதல்
தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ

வான் பார்த்து ஏங்கும்
சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ

நீரின்றி மீனும்
சேறுண்டு வாழும்
வாழ்விங்கு வாழ்வாகுமோ

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது

மீட்டாத வீணை
தருகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தலே

ஊட்டாத தாயின்
கணக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே

காயங்கள் ஆற்றும்
தலைக்கோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே

தொடுவானம் இன்று
நெடுவானம் ஆகி
தொடும்நேரம் தொலைவாகுதே

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaala

Keep listening

More from this movie

  1. Thanga Sela தங்க சில‌

    Sung by Shankar Mahadevan, Pradeep Kumar and Ananthu

  2. Semma Weightu செம Weightu

    Sung by Hariharasudan, Santhosh Narayanan

  3. Katravai Patravai கற்றவை பற்றவை

    Sung by Yogi B, Arunraja Kamaraj, Roshan Jamrock and Rajinikanth (Voice Over)

  4. Kannamma கண்ணம்மா

    Sung by Pradeep Kumar and Dhee

  5. Theruvilakku தெருவிழக்கு வெளிச்சத்தில‌

    Sung by Dopeadelicz and Mutamil

  6. Nikkal Nikkal CHALTH TERE நிக்கல் நிக்கல் CHALTH TERE

    Sung by Dopeadelicz, Vivek and Arunraja Kamaraj