Annaiyin Karuvil Kaliyamal artwork

Song lyrics

Annaiyin Karuvil Kaliyamal

அன்னையின் கருவில் கலையாமல்

7511 views

Singer · Shankar Mahadevan

Lyrics · Annamalai

The lyrics

அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொன்று
நடந்திடும் என்று நம்பி இன்று

விதைக்குள் தூங்கும் ஆல மரம்
கண்ணுக்குத் தெரியாது
அது மரமாய் வளரும் காலம் வரும்
மண்ணுக்கும் உறங்காது

நீ தேடும் சிகரம் தூரம் இல்லை
நடப்பதை நிறுத்தாதே
வெறும் துளி தான் இங்கே கடலாகும்
நம்பிக்கை தொலைக்காதே

மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்
பாறை கூட பாதை ஆகும்
முன்னால் வைத்த காலை நீயும்
பின்னால் எடுக்காதே

பூக்கள் பூக்க வேர்கள் தேவை
வெற்றிக்கிங்கே வேண்டும் வேர்வை
உன் கை ரேகை தேய்ந்தா போகும்
உழைப்பதை நிறுத்தாதே…(அன்னையின்)

உன்னால் என்ன முடியும் என்று
உனக்கே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து கொண்டால்
சாதிக்க தடை ஏது

முயற்சிகள் செய்து தோற்பதெல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது

இல்லை என்ற சொல்லை கூட
இல்லை என்று தூக்கிப் போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலை இழக்காதே

வீழ்ந்தால் கூட பந்தாய் மாறு
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியை நிறுத்தாதே....(அன்னையின்)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Haridas

Keep listening

More from this movie

  1. Vazhkaiye Ini Ungal வாழ்க்கையே இனி உங்கள் கையில்

    Sung by Maalavika Manoj, GNR Kumar

  2. Vella Kuthira Mele வெள்ளக் குதிர மேல

    Sung by Ramaniammal

  3. Annaiyin Karuvil Kaliyamal அன்னையின் கருவில் கலையாமல்

    Sung by Shankar Mahadevan

  4. Uchchi Veyil Roadula உச்சி வெயில் ரோட்டுல

    Sung by D.Imman, Divyakumar