Unmai Edhu Poy Edhu artwork

Song lyrics

Unmai Edhu Poy Edhu

உண்மை எது பொய் எது

6999 views

Singer · Shankar Mahadevan, Swetha Mohan

Lyrics · Madhan Karky

The lyrics

பெண்:
ஒரு பாதி மெய் என்பதா
மறு பாதி பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே என
என் கண்கள் பொய் சொல்லுதா

ஆண்:
கனவெல்லாம் மெய் என்பதா
நிஜமெல்லாம் பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே என
என் நெஞ்சம் மெய் சொல்லுதா

இருவரும்:
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது

பெண்:
இதன் முன்னே காணா விழா
தொலைகின்றேன் என் காதலா
பொய் என்னும் வான் மீதிலே
மெய் என்று தோன்றும் நிலா

ஆண்:
இள ஊதா விண்ணின் ஒளி
விழி ரெண்டில் என் காதலி
மெய் என்னும் கார் ஒன்றிலே
பொய் என்ற கீச்சும் கிளி

இருவரும்:
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது

ஆண்:
வானம் எங்கெங்கும் பூமி பந்தெங்கும்
எல்லாமே அழகாய்
எந்தன் கண்களோ உன்னை மட்டும் காணுதே
நெஞ்சம் எங்கெங்கும் கோடி
மலைகள் வெடித்து எரிய
என் காதலோ உன் தீயை கேட்குதே

பெண்:
பூநாரை கரை கண்ணெட்டும் வரை
என் வாழ்வின் உரை நீ மட்டும் இறை
முத்தத்தில் உறைந்தேன் உயிர் இது
மெய்யா என்ன சோதித்து அன்பே நீ சொல்லடி

இருவரும்:
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Saaho

Keep listening

More from this movie

  1. Kadhal Saiko காதல் சைக்கோ

    Sung by Anirudh Ravichander, Dhvani Bhanushali, Tanishk Bagchi

  2. Mazhaiyum Theeyum மழையும் தீயும்

    Sung by Shakthisree Gopalan, Haricharan

  3. Bad Boy Bad Boy

    Sung by Benny Dayal, Sunitha Sarathy

  4. Unmai Edhu Poy Edhu உண்மை எது பொய் எது

    Sung by Shankar Mahadevan, Swetha Mohan