Un Sirippinil artwork

Song lyrics

Un Sirippinil

உன் சிரிப்பினில்

62878 views

Singer · Gouthami Rao, Robby

Lyrics · Thamarai

The lyrics

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மின்பார்வையில் மீதியும் தேய
ம் இன்று நேற்று என்று இல்லை

என் இந்த நிலை

ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை
உன் சிரிப்பினில்…

உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்துநிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியினில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல
தினம்தினம் என்னை சூழும் தீ
உன் சிரிப்பினில்…

முதல்நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனைக்காண்பதே வழக்கம் எனக்கு
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பது கொஞ்சம் வஞ்சமே

உன் சிரிப்பினில்…
ம் இன்று நேற்று…
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pachaikili Muthucharam

Keep listening

More from this movie

  1. Karu Karu கரு கரு விழிகளால்

    Sung by Karthik, Naresh Iyer

  2. Un Sirippinil உன் சிரிப்பினில்

    Sung by Gouthami Rao, Robby

  3. Unakkul Naane உனக்குள் நானே உருகும் இரவில்

    Sung by Bombay Jayashree

  4. Kaadhal Konjam காதல் கொஞ்சம் காற்றுக் கொஞ்சம்

    Sung by Naresh Iyer