Pachchai Vanna Poovae artwork

Song lyrics

Pachchai Vanna Poovae

பச்சை வண்ண பூவே

16276 views

Singer · Yuvan Shankar Raja

Lyrics · Madhan Karky

The lyrics

பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்

செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்

ஹே புல்லின் மேலே பாடம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே

பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்

என் கால் ஒன்றில் முள் குத்தினால்
அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள்

வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றில்
காயென்று சொன்னாலே என்னை ஈர்க்கிறாள்

நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்

இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்

இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்

என் வீடெங்கும் காடாக்கினால் என் காட்டுக்குள் கிளி ஆகினாள்
கிளியொன்றில் கீற்றாகி இலை ஒன்றில் மூச்சாகி
முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்

ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய் வேரெங்கும் தாராளமாய்

மழை நனைத்த பின்னே நான் சிலிர்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்

மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குளே ஏதோ நான் துளிர்கின்றேன்
நான் துளிர்கின்றேன்

பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனை

செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்

ஹே புல்லின் மேல பாடம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்டபின்னே

பச்சை வண்ண பூவே ஹே
பச்சை வண்ண பூவே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vai Raja Vai

Keep listening

More from this movie

  1. Vandha Kadha வந்த கத வாழ்ந்த கத

    Sung by Gaana Bala

  2. Pookkamazh Oothiya பூக்காமல் ஒதிய

    Sung by Tanvi Shah, Yuvan Shankar Raja

  3. Pachchai Vanna Poovae பச்சை வண்ண பூவே

    Sung by Yuvan Shankar Raja

  4. Naam Vaazhndhidum நாம் வாழ்ந்திடும்

    Sung by Hiphop Tamizha, Yuvan Shankar Raja

  5. Move Your Body மூவ் யுவர் பாடீ

    Sung by Ilaiyaraaja