Yaaro Ivan artwork

Song lyrics

Yaaro Ivan

யாரோ இவன்

115473 views

Singer · G. V. Prakash Kumar,Saindhavi

Lyrics · La. Rajkumar

The lyrics

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ
நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா
எதிர்காலமே

எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Udhayam NH4

Keep listening

More from this movie

  1. Yaaro Ivan யாரோ இவன்

    Sung by G. V. Prakash Kumar,Saindhavi

  2. Indrodu Thadaigal இன்றோடு தடைகள்

    Sung by Srinivas, Ramya NSK

  3. Oru Kannala ஒரு கண்ணால

    Sung by Gaana Bala

  4. Vaa Iravugal வா இரவுகளை கொல்வோம்

    Sung by Ajmal Khan, Amrith Vishwanath

  5. Maalai Pon Maalai மாலை பொன் மாலை

    Sung by Bela Shende, S. P. B. Charan