Kanna Un Kannil

Song lyrics

Kanna Un Kannil

கண்ணா உன் கண்ணில்

325 views

Singer · Swarnalatha

Lyrics · Piraisoodan

The lyrics

பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே

பெண் : நிழலாக நீ காணும் கானல் நீர்
நிஜமாக உன் தாகம் தீர்க்காது
நினைவாலே எனை எண்ணி வாழ்ந்தாலும்
அது என்றும் நிஜ வாழ்க்கை ஆகாது

பெண் : உன் வேதனை பார்க்கின்றதே
உயிர் ஓவியம் கேட்கின்றதே
புண்ணாக உன் நெஞ்சம் ஆவதேன்
பொன்னான காலங்கள் போவதேன்

பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே

பெண் : ஹோ ஓ ஹோ

பெண் : தினம் தீண்டும் பூந்தென்றல் காற்றோடு
உனைத் தீண்ட வருவேனே மண் மீது
உன் கைகள் தொடுகின்ற பொருள் எல்லாம்
உன் தேகம் படுகின்ற இடம் எல்லாம்

பெண் : உனைச் சேரவே தவிக்கின்றதே
ஒரு பெண் மயில் துடிக்கின்றதே
நீ வேறு நான் வேறு இல்லையே
அவன் வேறு நான் வேறு இல்லையே

பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Unna Nenachen Pattu Padichen

Keep listening

More from this movie

  1. Ennai Thottu என்னை தொட்டு

    Sung by S. P. Balasubrahmanyam, Swarnalatha

  2. Kanna Un Kannil கண்ணா உன் கண்ணில்

    Sung by Swarnalatha

  3. Vaanam Idi Idikka வானம் இடி இடிக்க

    Sung by S. Janaki, S. P. Balasubrahmanyam

  4. Mundi Mundi Vinayagare முந்தி முந்தி விநாயகரே

    Sung by Malaysia Vasudevan, Ilaiyaraaja

  5. Thottu Thottu Thookkipputte தொட்டு தொட்டு தூக்கிப்புட்டே

    Sung by Minmini