Naalum Naalum artwork

Song lyrics

Naalum Naalum

நாளும் நாளும்

3280 views

Singer · Monali Thakur, Benny Dayal

Lyrics · Vivek (lyricist)

The lyrics

பெண் : நாளும் நாளும்
ஆண் : நாளும் நாளும்
பெண் : சேர்ந்தால் தானே
ஆண் : சேர்ந்தால் தானே
பெண் : வாரம் மாதம்
ஆண் : வாரம் மாதம்
பெண் : வருடம் ஆகும்
ஆண் : வருடம் ஆகும்

குழு : ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா

பெண் : நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…
பெண் : வாரம் மாதம்
வருடம் ஆகும்
குழு : ஓ….ஓ…

பெண் : இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்….
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே

பெண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
பெண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…

குழு : ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா

பெண் : புல் மனதின் உள்ளே
துள்ளி ஏறும் காலை போல
பல எண்ணம்
மூடி வைத்த உண்மை
என்ன வென்று அந்த
முத்து கண்கள் சொல்லும்

பெண் : சொல்லிவிட
வேண்டும் என்று
எண்ணி வரும் போது
சொற்கள் என்னை கட்டிபோடுதே
சொல்ல சொல்ல ஒத்திகையில்
பக்கம் நின்ற வார்த்தை
அந்தரத்தில் விட்டு போகுதே

பெண் : பேசாத நம் உணர்வெல்லாம்
மொழி இங்கு சொல்லாது
திருமணங்கள் இணைந்தாலே
பாலங்கள் வராது

பெண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
பெண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…

பெண் : நெஞ்சங்கள் இரண்டு
தேடி தேடி
தன்னை தொலைத்ததும் என்ன
கண் இமைகள் மூட
அந்த உலகினில் கண்ட
கனவு என்ன

பெண் : தன்னிடத்தில் துளிகளை
தேங்கி வைத்த மேகம்
எந்த நொடி மழை தருமோ
தொட்டு தொட்டு கிளைகளில்
பட்டு வரும் காற்று
எந்த நொடி பூவை தொடுமோ

பெண் : நதி போகும் திசையோடு
சிறு ஓடம் செல்லாதோ
பயணங்கள் இது என்ன
கடலோடும் தொடராதோ

பெண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
பெண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…
பெண் : வாரம் மாதம்
குழு : ஓ….ஓ…
பெண் : வருடம் ஆகும்
குழு : ஓ….ஓ..

பெண் : இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த
பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்….
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே

பெண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
பெண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to 60 Vayathu Maaniram

Keep listening

More from this movie

  1. Iraivinai Thedi இறைவனை தேடும் உலகத்தில்

    Sung by Ilaiyaraaja

  2. Naalum Naalum நாளும் நாளும்

    Sung by Monali Thakur, Benny Dayal

  3. Naalum Naalum (Happy) நாளும் நாளும் ‍

    Sung by Benny Dayal, Monali Thakur

  4. Thedi Thedi தேடி தேடி ஓடும் கால்கள்

    Sung by Benny Dayal, Vibhavari Apte joshi