Malligai Maalai Katti artwork

Song lyrics

Malligai Maalai Katti

மல்லிகை மாலை கட்டி

3116 views

Singer · Ilaiyaraaja

Lyrics · Vaali

The lyrics

மல்லிகை மாலை கட்டி
மங்கல மேளம் கொட்டி
கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை
பட்டதும் போதும் அம்மா
தொட்டதே பாவம் அம்மா
பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை

ஏன் நெஞ்சில் போராட்டம்
ஏன் கண்ணில் நீரோட்டம்
நீ பாடும் பூந்தோட்டம்
மல்லிகை மாலை கட்டி

குற்றங்கள் கற்பிக்கத் தானோ
கொண்டவன் கொண்டு வந்தானோ
உப்புக் கல்லை வைரம் என்று
நம்பி நடந்த பாவம்

மஞ்சள் தாலி பூ விலங்கா
காலில் போட்ட பொன் விலங்கா
பொல்லாத கணவன் பொருந்தாத ஒருவன்
பிழை செய்தான் இறைவன் ஹோ.....(மல்லிகை)

நாயகன் வாழ்கிற வீடு
நங்கைக்கு இங்கொரு காடு
இல்லறம் தான் நல்லறமாய்
தெய்வம் நினைத்தால் மாறும்

வாடைக் காலம் சென்றிடலாம்
வேனிற் காலம் வந்திடலாம்
சோலைத் தென்றல் பாடிடலாம்
சோகம் நீங்கி ஆடிடலாம்
நீ பாடக் கூடும் ஓர் புதிய ராகம்
ஓர் புதிய ராகம் ஹோ.....(மல்லிகை).

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Puthiya Raagam

Keep listening

More from this movie

  1. Oh Janani ஓ ஜனனி என் ஸ்வரம் நீ

    Sung by Mano

  2. Deivangal தெய்வங்கள் கண் பார்த்தது

    Sung by Mano, S. Janaki

  3. Malligai Maalai Katti மல்லிகை மாலை கட்டி

    Sung by Ilaiyaraaja

  4. Maalai Soodum மாலை சூடும் மாலை நேரம்

    Sung by K. S. Chithra

  5. Vaadumo Oviyam வாடுமோ ஓவியம்

    Sung by Mano, S. Janaki