Thai Madiyil artwork

Song lyrics

Thai Madiyil

தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்

20521 views

Singer · Kailash Kher

Lyrics · Mysskin

The lyrics

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

உன் பூமடி எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை

ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

சோகம் தாங்கி
பாரம் இறக்க யாரும் இல்லையே
தாகம் தீர்க்க
சுணையாய் இங்கு கருணை இல்லையே

கோபம் வாழ்வில் நிழலாய்
ஓடி ஆடி அலையா
பாசம் நெஞ்சில் கனலாய்
ஓங்கி ஏங்கி எரிய

காற்றே என்
காற்றே உன்
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

காயம் செய்த மனிதன்
இன்று இருளில் கரைகிறேன்
நியாயம் செய்த மனதை
நினைத்து ஒளியில் நனைகிறேன்

காலம் மீண்டும் மாற
மாயம் கையில் இல்லை
ஞாலம் மீண்டும் மாற
பாரம் நெஞ்சில் இல்லை

தாயே என்
தாயே உன்
சேய் இங்கு கருவில் கலந்திடுவேன்

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை

ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே (2)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Psycho

Keep listening

More from this movie

  1. Neenga Mudiyuma நீங்க முடியுமா நினைவு தூங்குமா

    Sung by Sid Sriram

  2. Thai Madiyil தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்

    Sung by Kailash Kher

  3. Unna Nenachu உன்ன நெனச்சு நெனச்சு

    Sung by Sid Sriram