Kattru Vaanga artwork

Song lyrics

Kattru Vaanga

காற்று வாங்கப் போனேன்

27383 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்

நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்(நான் காற்று)

நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்(நான் காற்று)

என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kalangarai Vilakkam

Keep listening

More from this movie

  1. Enna Uravo என்ன உறவோ

    Sung by T. M. Soundararajan

  2. Ennai Maranththen என்னை மறந்ததேன்

    Sung by P. Susheela

  3. Kattru Vaanga காற்று வாங்கப் போனேன்

    Sung by T. M. Soundararajan

  4. Pallavan Pallavi பல்லவன் பல்லவி பாடட்டுமே

    Sung by T. M. Soundararajan

  5. Ponnezhil Pootadu பொன்னெழில் பூத்தது

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Sange Muzhangu சங்கே முழங்கு

    Sung by P. Susheela, Seerkazhi Govindarajan