Song lyrics
Vaanam Paarthen
வானம் பார்த்தே
29821 views
Singer · Pradeep Kumar
Lyrics · Kabilan
The lyrics
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
ஏனோ இன்று தூரம் போனால்
இடப் பக்கம் துடித்திடும் இருதய இசை என
இருந்தவள் அவள் எங்கு போனாளோ
இரு விழி இமை சேராமல் உறங்கிட மடி கேட்கிறேன்
மழையினை கண் காணாமல்
மேகம் பார்த்து பூமி கேட்க நான் பாடினேன்
நீ இல்லா நானோ நிழலை தேடும் நிஜம் ஆனேனடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
எங்கும் பார்த்தேன் உந்தன் பிம்பம்
கனவிலும் நினைவிலும் தினம் தினம் வருபவள்
எதிரினில் இனி வர நேராதோ
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டிக் கொண்ட மீன் நானடி
ஏமாறும் காலம் இனி வேண்டாமடி கை சேரடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Maya Nadhi மாய நதி இன்று
Sung by Ananthu, Pradeep Kumar, Shweta Mohan
-
Ulagam Oruvanukka உலகம் ஒருவனுக்கா
Sung by Ananthu, Santhosh Narayanan, Gana Bala, Roshan Jamrock
-
Neruppu Da நெருப்பு டா நெருங்கு டா
Sung by Arunraja Kamaraj, Rajinikanth
-
Vaanam Paarthen வானம் பார்த்தே
Sung by Pradeep Kumar
-
Veera Thurandhara வீரத் துரந்தரா
Sung by Gana Bala, Lawrence R, Pradeep Kumar, Roshan Jamrock