Hey Raja artwork

Song lyrics

Hey Raja

ஹேய் ராஜா ஒன்றானோம்

13215 views

Singer · Mano, S. P. Balasubramaniam

Lyrics · Gangai Amaran

The lyrics

ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று
ஹேய் ராஜா 
ஒன்றானோம் இன்று
இனி நாம் தானே 

ரெண்டல்ல ஒன்று 

லா ல லலல் லா லா ல லலல் லா 
லால லலல்லால லலலல லால லலல்லா...

வேலி உனக்கு கிடையாது
தாவி பறந்து விளையாடு

பாச வலை விழுந்த போது
பறவை பறக்க முடியாது

காலம் கரம் அணைத்த கோலம்
இரண்டு கரை பாலம் இணைந்து நின்றது
நாளும் இணைந்திருந்து வாழும் இறைவன் தந்த 
கோலம் புவியை வென்றது

இனி மேலே பாடு புது ராகம் ஹா
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை

ஹேய் ராஜா 

ஒன்றானோம் இன்று

ஹா இனி நாம் தானே 
ரெண்டல்ல ஒன்று 

பார்வை கருணை மழை சிந்தும்
பழகும் தமிழும் புதுச் சந்தம்

பாதி வழியில் வந்த பந்தம்
தேவன் எனக்களித்த சொந்தம்

யோகம் எனக்கு ஒரு யோகம்
மனதில் உள்ள பாரம் மறைந்து விட்டது

வானம் வரை பறந்த நானும்
வழியில் துணை நீயும் இணையக் கண்டது

தடை ஏதும் இல்லை மனம் வெள்ளை ஓ
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை

ஹேய் ராஜா 
ஒன்றானோம் இன்று

ஹா இனி நாம் தானே 
ரெண்டல்ல ஒன்று 
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று

ஹேய் ராஜா 
ஒன்றானோம் இன்று

ஹஹஹ்ஹா இனி நாம் தானே 
ரெண்டல்ல ஒன்று... 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Jallikattu

Keep listening

More from this movie

  1. Yeriyil Oru ஏரியில் ஒரு ஓடம்

    Sung by Malaysia Vasudevan

  2. Yethanaiyo எத்தனையோ கன்னிப் பொண்ணு

    Sung by Mano, S. Janaki

  3. Hey Raja ஹேய் ராஜா ஒன்றானோம்

    Sung by Mano, S. P. Balasubramaniam

  4. Kaadhal Kizhiye காதல் கிளியே

    Sung by Mano, S. Janaki

  5. Kathi Chandai Poadaamale கத்திச் சண்டை

    Sung by K. S. Chithra