Kangal Irandum artwork

Song lyrics

Kangal Irandum

கண்கள் இரண்டும்

7439 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..
கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..


மழைத்துளி விழ விழ முத்து விளையும்ஆஹா..
பனித்துளி விழ விழ மொட்டு மலரும்ஓஹோ..
தேன் துளி விழ விழ இதழ் சிவக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
கனிச்சுமை கொண்டு வந்த கொடி வளையும்ஆஹ,..கன்னியிடை

அல்லித்தண்டு மெல்ல நெளியும்ஓஹோ..
மதுக்கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப்புது கலைகளில் துயில் மறக்கும்
கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..


முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம்
எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்
இருட்டிலும் படித்திடும் எழுத்தல்லவோ
சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ


சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்ம்ம்..
மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்
இலக்கணம் வகுப்பதும் இரவல்லவோ
பின்னோடு வருகின்ற உறவல்லவோ 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kannan En Kadhalan

Keep listening

More from this movie

  1. Kangal Irandum கண்கள் இரண்டும்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  2. Kettikariyin Poyyum கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Minminiyei Kanmaniyai மின்மினியை கண்மணியாய்

    Sung by L. R. Eswari, T. M. Soundararajan

  4. Paaduvor Paadinaal பாடுவோர் பாடினால்

    Sung by T. M. Soundararajan

  5. Siriththaal Thangapadumai சிரித்தாள் தங்கப் பதுமை

    Sung by P. Susheela, T. M. Soundararajan