Mangkilai Meloru Poongodi artwork

Song lyrics

Mangkilai Meloru Poongodi

மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது

1435 views

Singer · SP. Balasubramaniam, Vani Jayaram

Lyrics · Naa. Kamarasan

The lyrics

ஆண் : மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது
மாங்கிளை மேலொரு பூங்கொடி
சாய்ந்தது எங்கும் பூவாசம்
மன்னவன் மேலொரு பொன் மயில்
சாய்ந்தது நெஞ்சில் உல்லாசம்

இது அதுதான் இன்பக் கதைதான்
இது அதுதான் இன்பக் கதைதான்
மாங்கிளை மேலொரு பூங்கொடி
சாய்ந்தது எங்கும் பூவாசம்

பெண் : ஆசைகளால் ஒரு நாடகம்
ஆனந்த மேடை காவியம்
தேவதை போலொரு ஊர்வலம்
தேவதை போலொரு ஊர்வலம்
திருநாள் இது திருநாள் திருநாள் இது திருநாள்

ஆண் : மலைகளை மூடி மறைத்திட முயன்று
தோற்கும் அருவி நீரோட்டம்
மலைகளை மூடி மறைத்திட முயன்று
தோற்கும் அருவி நீரோட்டம்

இளமங்கையின் மேனியில் புதிய ஆடைகள்
மேலும் மேலும் அழகூட்டும்
இளமங்கையின் மேனியில் புதிய ஆடைகள்
மேலும் மேலும் அழகூட்டும்

பெண் : பாடும் கிளியின் சிறகுகள் போலே
பச்சை வண்ண பட்டாடை
பாடும் கிளியின் சிறகுகள் போலே
பச்சை வண்ண பட்டாடை

பருவ ராணிக்கு சாமரம் வீசிட
காற்றில் பறக்குது மேலாடை
காற்றில் பறக்குது மேலாடை

ஆண் : சங்கு கழுத்தில் முத்து மாலைகள்
ஆடும் நடனம் போதாதோ
தங்கக் கழுத்தை எனது கைகள்
தங்கக் கழுத்தை எனது கைகள்
தழுவிக் கொண்டால் ஆகாதோ
ஆஹாஹ் லாலாலா ஹேஹ் ஆஆஹாஹ்....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thalaivanukkor Thalaivi

Keep listening

More from this movie

  1. Kelvi Rendu Kidakku கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல்

    Sung by Dr. Balamuralikrishna

  2. Mangkilai Meloru Poongodi மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது

    Sung by SP. Balasubramaniam, Vani Jayaram