Kukkuk Koovena Koovum artwork

Song lyrics

Kukkuk Koovena Koovum

குக்குக் கூவென கூவும்

2147 views

Singer · S. P. Balasubramaniam, K. S. Chitra

Lyrics · Vaali

The lyrics

பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு
பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு

ஆண் : கன்னத்தோடு கன்னம் வைத்து
கள்ளெடுக்கும் கள்ளன் நானே
பெண் : தேக்கி வைத்த தேனை எல்லாம்
பாக்கி இன்றி தந்தாள் மானே

ஆண் : காவேரி மீனை கஸ்தூரி மானை
கையோடு ஏந்த கும்மாளமோ
பெண் : காவல் மீறும் எண்ணம் வந்ததோ
பாவை வண்ணம் போதை தந்ததோ

ஆண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
பெண் : இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு

பெண் : மேற்கில் போகும் மேகம் ஒன்று
வானம் பார்க்கும் மண்ணைக் கண்டு
ஆண் : தூறல் போடும் நேரம் இன்று
வாழ வேண்டும் வாழைக்கன்று

பெண் : வேரோடும் மண்ணில் நீரோடும் போது
ஏதேதோ எண்ணம் உண்டாகுமோ
ஆண் : காமன் போடும் பாணம் அல்லவோ
காயம் மாறும் மாயம் சொல்லவோ

பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு
பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nethiyadi

Keep listening

More from this movie

  1. Aattathai Paarthuttu ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு

    Sung by Mano

  2. Kukkuk Koovena Koovum குக்குக் கூவென கூவும்

    Sung by S. P. Balasubramaniam, K. S. Chitra

  3. Pockettula Paththu Kaasu பாக்கெட்டுல பத்துக் காசு

    Sung by S. P. Balasubramaniam

  4. Paateduthu Paadukiren பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல

    Sung by R. Pandiarajan

  5. Vizhikalil Oru Kaviyam விழிகளில் ஒரு காவியம்

    Sung by P. Suseela

  6. Naan Unakku Nalla நான் உனக்கு நல்ல

    Sung by Malasiya Vasudevan, S. P. Sailaja