Kashmir beautiful artwork

Song lyrics

Kashmir beautiful

ஓடுகின்ற மேகம்

9740 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

vaNakkam! vandhanam! namastae! namOshkaar!
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir

ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள் இங்கே உண்டென்று சொல்லுங்கள்
காணுங்கள் சொர்க்கம் இதுவென்று
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
"randi! banni! yayathi! aashO..!"
"Its a paradise on earth.. so i visited God!"
come on enjoy summer season
charming flowers, hanging gardens

எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்

"ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?"
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா

Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir

ஆடைகள் கூடைகள் கம்பளம் ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும் ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும்
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir aaahhh..aa.a..ahaaa.ahh..

வெட வெட வென்று குளிரும்போது கதகதப்பாக
இருப்பதற்கு இங்கே வாழும் மனிதர் யாவரும்
வயிற்றில் கட்டிவைத்திருப்பார் ஒரு கணப்பு
வாடைக்கு பயந்தாரோ இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
வாடைக்கு பயந்தாரோ இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
மடியினில் நெருப்பை கட்டிக் கொள்வார்
என்னும் பழமொழி இவர் தான் படைத்தாரோ
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir

என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Idhaya Veenai

Keep listening

More from this movie

  1. Aanandham Indru ஆனந்தம் இன்று ஆரம்பம்

    Sung by S. Janaki, T. M. Soundararajan

  2. Kashmir beautiful ஓடுகின்ற மேகம்

    Sung by T. M. Soundararajan

  3. Neeraadum நீராடும் அழகெல்லாம்

    Sung by P. Susheela

  4. Oru Vaalum ஒரு வாலுமில்லே

    Sung by T. M. Soundararajan

  5. Pon Andhi பொன் அந்தி மாலை

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Thirunirai Selvi திருநிறைசெல்வி

    Sung by T. M. Soundararajan