Thendral Kaatre artwork

Song lyrics

Thendral Kaatre

தென்றல் காற்றே

29688 views

Singer · K. J. Yesudas, S. Janaki

Lyrics · Vaali

The lyrics

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத்தான்

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத்தான்

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்
நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத்தான்

ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்
இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்
மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத்தான்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Eeramaana Rojaave

Keep listening

More from this movie

  1. Vaa Vaa Anbe வா வா அன்பே

    Sung by K. J. Yesudas, S. Janaki

  2. Adho Mega Oorvalam அதோ மேக ஊர்வலம்

    Sung by Mano, Sunandha

  3. Kalakalakum Maniosai கலகலக்கும் மணியோசை

    Sung by Mano, S. Janaki

  4. Thendral Kaatre தென்றல் காற்றே

    Sung by K. J. Yesudas, S. Janaki

  5. Vanna Poongavanam வண்ண பூங்காவனம்

    Sung by K. S. Chithra