Vaanuyarntha Solaiyile artwork

Song lyrics

Vaanuyarntha Solaiyile

வானுயர்ந்த சோலையிலே

44929 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Pavalar Varadharasan

The lyrics

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்

நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை

தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்

வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே

ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி

பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து

பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே
← Back to Idaya Kovil

Keep listening

More from this movie

  1. Yaar Veetu Roja யார் வீட்டில் ரோஜா

    Sung by S. P. Balasubramaniam

  2. Paattu Thalaivan பாட்டு தலைவன்

    Sung by S. P. Balasubramaniam

  3. Oororama Aathupakkam ஊரோரமா ஆத்துப்பக்கம்

    Sung by Ilaiyaraaja

  4. Kootathilae Kovil Pura கூட்டத்துலே கோவில்

    Sung by S. P. Balasubramaniam

  5. Idhayam Oru Kovil இதயம் ஒரு கோவில்

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  6. Vaanuyarntha Solaiyile வானுயர்ந்த சோலையிலே

    Sung by S. P. Balasubramaniam