Usalampatti Penkutti artwork

Song lyrics

Usalampatti Penkutti

உசிலம்பட்டி பெண்குட்டி

51208 views

Singer · Shahul Hameed, Swarnalatha

Lyrics · Vairamuthu

The lyrics

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

கூட மேல கூட மேல வெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாக செல்லேண்டி

உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசு தடி
குதி போட்டு வந்தேண்டி

உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு

உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி

கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
மைய வைக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா

அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு சேர்ந்து போனால் ஆகாதா
மாடு புடிச்சி முடிச்ச கைய்யில் மயில புடிப்பே தெரியாதா

மயிலே மயிலே இறகொண்ணு போடு
தானா விழுந்தா அது உம் பாடு
இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி

உசிலம் பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே

வெடலப் பொண்ணு நுனி நாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்ப மரத்து கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு

இடுப்பு சேல இடை வெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு
ஆச பட்ட மாமனுக்கு ஆண்டிப் பட்டி மடமிருக்கு

தணியும் தணியும் தானா தணியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்

மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அது தான் பெண்ணின் குணம்

உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி

கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Gentleman

Keep listening

More from this movie

  1. Otagatha Kattiko ஓட்டகத்த கட்டிக்கோ

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  2. Enveetu Thotthil என் வீட்டு தோட்டத்தில்

    Sung by S. P. Balasubramaniam, Sujatha Mohan

  3. Parkathey Parkathey பார்க்காதே பார்க்காதே

    Sung by Minmini, Srinivas, Noel James

  4. Chikku Bukku Rayile சிக்கு புக்கு சிக்கு புக்கு

    Sung by G. V. Prakash Kumar, Suresh Peters

  5. Usalampatti Penkutti உசிலம்பட்டி பெண்குட்டி

    Sung by Shahul Hameed, Swarnalatha