Neeyum Bommai artwork

Song lyrics

Neeyum Bommai

நீயும் பொம்மை

8623 views

Singer · K. J. Yesudas

The lyrics

நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை
அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
இன்ப சோலையில் இயற்கை பொம்மை
அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
நதியின் முன்னே தர்மமும் பொம்மை
வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Moodar Koodam

Keep listening

More from this movie

  1. Kannodu Kangal கண்ணோடு கண்கள்

    Sung by Srinivas

  2. Neeyum Bommai நீயும் பொம்மை

    Sung by K. J. Yesudas

  3. Vela Vetti வேலை வெட்டி ஏதும் இல்ல

    Sung by Naresh Iyer

  4. En Per Sendrayan எவண்ட அவன் கிளாஸ்