Nitham Nithamoru

Song lyrics

Nitham Nithamoru

நித்தம் நித்தம் ஒரு புத்தம்

3716 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம்
அதை நான் தேடினேன்
இளமை கொஞ்சும் எழில் தலைமை தாங்கும்
உன்னை என்றும் நாடினேன்

நீ அணைக்க உயிர் இனிக்க
அதை விழிகள் கூறாதோ
மெய் எழுத்தும் உயிர் எழுத்தும்
ஒரு மொழியில் சேராதோ (நித்தம்)

ஓராயிரம் பாவையர் பார்வையில் பட்டும்
உன்மேல் விழுந்தன கண்கள்
ஈராயிரம் ஆண்டுகள் தவம் இருந்தாலும்
உன்போல் இல்லை பெண்கள்
உன்போல் இல்லை பெண்கள்

வேளைக்குவேளை புது ரோஜா
வேண்டுகின்ற ஒரு மகாராஜா
மலருக்குமலர் ஒரு சுவை கண்டேன்
வாடா மலராய் உனைக் கண்டான் (நித்தம்)

மேலாடையில் மூடிய மாங்கனி துஞ்சும்
மஞ்சம் போல் இவள் நெஞ்சம்
தேனூறிடும் ஓடையில் நீந்திடும் பெண்மையும்
மையலில் துள்ளும் கொஞ்சம்
மையலில் துள்ளும் கொஞ்சம்

மூச்சுக்கு மூச்சு ஒரு நூறு முத்தங்கள்
ஆடும் முகம் பாரு
இதழுக்கு இதழ் ஒரு கதை கூறு
வா வா மடிமேல் இளைப்பாறு (நித்தம்)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nootrukku Nooru

Keep listening

More from this movie

  1. Naan Unnai Vaazhthi நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

    Sung by P. Susheela

  2. Nitham Nithamoru நித்தம் நித்தம் ஒரு புத்தம்

    Sung by T. M. Soundararajan