Song lyrics
Innisai Paadivarum
இன்னிசை பாடிவரும்
154552 views
Singer · P. Unnikrishnan
Lyrics · Vaali
The lyrics
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

கண் இல்லையென்றாலோ நிறம் பார்க்கமுடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களே நம் ரகசியமானது
ரகசியம் காண்பதே மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Irupathu Kodi Nilavukal இருபது கோடி நிலவுகள் கூடி
Sung by Hariharan
-
Thodu Thodu Enave தொடு தொடு எனவே வானவில்
Sung by Hariharan, K. S. Chithra
-
Mekamai Vanthu Pokiren மேகமாய் வந்து போகிறேன்
Sung by M. Rajesh
-
Palapalakkudhu பளபளக்குது புது
Sung by Gopal
-
Innisai Paadivarum இன்னிசை பாடிவரும்
Sung by P. Unnikrishnan